101 : 1
ٱلْقَارِعَةُ
மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!
101 : 2
مَا ٱلْقَارِعَةُ
எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?
101 : 3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
(நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
101 : 4
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள்.
101 : 5
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும்.
101 : 6
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,
101 : 7
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.
101 : 8
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,
101 : 9
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.
101 : 10
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
101 : 11
نَارٌ حَامِيَةٌۢ
(அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்.