87 : 1
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரங்கள்) மீது சத்தியமாக!
87 : 2
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான்.
87 : 3
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான்.
87 : 4
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
இன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்).
87 : 5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
பிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான்.
87 : 6
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
(நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,
87 : 7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
87 : 8
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
இன்னும், சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்.
87 : 9
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
ஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக!
87 : 10
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
87 : 11
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
இன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான்.
87 : 12
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
(அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான்.
87 : 13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான்.
87 : 14
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
(இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
87 : 15
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
இன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார்.
87 : 16
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
87 : 17
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ
மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.
87 : 18
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,
87 : 19
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
இப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது).