97 : 1
إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
(நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
97 : 2
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
(நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
97 : 3
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
97 : 4
تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.
97 : 5
سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).